Pages

Search This Blog

Showing posts with label Muthu. Show all posts
Showing posts with label Muthu. Show all posts

Wednesday, November 13, 2013

முத்து - கொக்கு சைவக் கொக்கு

கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் (2)

மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் (2)

பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சொக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு

(கொக்கு சைவக்)

பந்தாடும் வயசுப்பையா பாட்டி சொல் கேட்டுக்கைய்யா
தாம்பத்ய வாழ்க்கையிலே சட்டங்கள் இருக்குதைய்யா
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
I love you I love you 12 times சொல்லு

நித்தம் நீ ஆறு முற முத்தங்கள் போட்டுவிடு
நாளுக்கு மூணு முற கட்டிலில் சேர்ந்துவிடு
நான் சொன்ன கணக்கு நாள்தொறும் நடந்தா
பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா

(கொக்கு சைவக்)

வயசான சுந்தரியே மன்மதன் மந்திரியே
தாம்பத்யப் பாடத்திலே H.nகு முடிச்சவலே
அன்னாளில் நாட்டில் மாதம் மும்மாரி
உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு
இன்னாளில் மனிதனுக்கு சோத்துக்கு வழியில்லையே

ஒக்கார்ந்து காதலிக்க யாருக்கும் பொழுதில்லையே
ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு
பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு

(கொக்கு சைவக்)

Muthu - Kokku Saiva

முத்து - தில்லானா தில்லானா தித்திக்கின்ற

தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா

(தில்லானா)

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே

(தில்லானா)

Muthu - Thilana Thilana

முத்து - விடுகதையா இந்த வாழ்க்கை

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும் (2)
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்
நான் செய்த பாவம் என்ன (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகலோ எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு (2)
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
உனது ராஜங்கம் இதுதானே ஒதுங்கக்கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று கண்களில் கண்ணீரை ஏன் கொடுத்தாய்
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது (2)
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே (2)

Muthu - Vidu Kathaiya

முத்து - குலுவாலிலே மொட்டு

குலுவாலிலே...

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு தொறந்தல்லோ
தேன்குடிக்க...ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

(குலுவாலிலே)

ஓமணத் திங்கள் கீழாமோ நல்ல கோமளத் தாமரப்பூ...
பூவில் நெறஞ்ய மதுவோ பறி பூஜேந்து தண்டே இலாவோ...

ரங்கனாயகி ரங்கனாயகி ரங்கனாயகி ரங்கனாயகி
ரங்கனாயகி ரங்கனாயகி பச்ச மனச பறிச்சாயே
ஒம்ம முடி கலைவதுபோல் எம்மனச நீ கலச்சாயே
நான் என்ன கலைக்கிற ஆளா பழி சொல்லக் கூடாதே

(குலுவாலிலே)

மாணிக்க வீணையால் மலர்மகள் வாழ்த்துன்ன
மண்ணிலே ????மாய் ஈமலர்ந்தாட

என்ன கட்சி நம்ம கட்சி என்ன கட்சி நம்ம கட்சி
என்ன கட்சி நம்ம கட்சி நம்ம கட்சி OMN கட்சி
கட்சியெல்லாம் இப்பொ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு
கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னவோ திட்டம் இருக்கு

(குலுவாலிலே)

Muthu - Kuluvalilae

முத்து - ஒருவன் ஒருவன் முதலாளி

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய

மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

வானம் உனக்கு பூமியும் உனக்கு வறப்புகளோடு சண்டைகள் எதற்கு
வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

Muthu - Oruvan Oruvan

Followers